Monday, June 27, 2011

சாறு பிழியப்பட்ட சாரு - ஒரு அலசாத ரிப்போர்ட்


இணைய தளத்தில் ஹாட் டாபிக் "சாரு சாட்டிங்". தி ஹாட் மென் அண்ட் தி ஹாட் ரைட்டர் இன் லட்டின்(Latin).

"சாரு யாரு?" அப்படின்னு கேட்கிறீங்களா?

சாருவை பற்றி உங்களுக்கு தெரியாதா? கேரளாவில் போய் கேட்டு பாருங்கள்.

சாரு என்பவர் அறநெறியை பின்பற்றி காந்திய வழியில் நடப்பவர். இவர் தமிழ் கலாசாரத்தின் மீதுள்ள அளவறிய காதல் போற்றத்தக்கது. இவரது நன்னடத்தையை நாடறியும் (தமிழ் நாடு மட்டும்).

யார் எழுத்தை படிச்சா, பின்னங்கால் பிடரியில் அடிக்க தெறிச்சு எல்லோரும் ஓடுறாங்களோ, அவர் தான் சாரு.

அவர் புத்தகத்தை படித்ததில்லையா? (உங்க வீட்டு அட்ரஸ் சொன்னீங்கன்னா, புக் அனுப்பி வைப்பார்.) கண்டீசன் அப்ளை. (யு மஸ்ட் பி எ கேர்ள்)

இங்கு சாருவைப் பற்றி குறிப்பிடும் பொது அவர் என்று சொல்லுவதா? அவன் இவன் என்று பாலா பட டைட்டில் மாதிரி சொல்லுவதா?
அவர் என்று சொன்னால் சாருவின் அடிப்பொடி என்று நம்மை நினைத்து விடுவார்கள்.
அதனால் அவர் அவன் என்று மாற்றி மாற்றி உபயோக்கிக்கலாம். ரொம்ப ஜாக்கிரதையாய் இருக்கணும்.

ஒரு காலத்தில் ஹீரோ என்று வலையுலக மாகான்களால் புகழ்ந்து எழுதப்பட்ட சாரு, இன்று  "பிட்டு" பட ரேஞ்சுக்கு "சாருவின் சல்லாபம்" என்று தலைப்பிட்டு எழுதப்படும் நிலைக்கு ஆளாகி விட்டார். சாருவைப் பற்றி யார் நல்லவிதமா எழுதுனிங்களோ? அவர்கள் எல்லாம் போய் அந்த பதிவை யாருக்கும் தெரியாமல் நீக்கி விடுங்கள். ஒரு ராஜா இருக்கார். அவர் யாரையாவது பத்தி புகழ்ந்து எழுதிய கொஞ்ச காலத்திலேயே அந்த பிரபலம் எதோ ஒரு பிராப்ளத்தில் மாட்டி கொள்வார்.

விஜய் டிவி "நீயா? நானா?" வில்  வேட்டி உருவப்பட்டு ஓடிவந்த சாருவின் ஜாக்கி ஜட்டியும் இந்த சாட்டிங் சர்ச்சை மூலமாக உருவப்பட்டுள்ளது.

அந்த பெண் மாதிரி நானும் சாருவோட புக் எதையுமே படிக்காமலே இருந்தேன். சரி "இந்த ஆளு என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா!?" என்று அவனோட ஜீரோ டிகிரி எடுத்து படிக்க ஆரம்பித்தால், கை நடுங்க ஆரம்பிச்சிடுச்சு. முதல் மூணு பக்கத்திலேயே அதிர்ச்சி அடைந்து விட்டேன். திடீர் திடீர்ன்னு கதை, கண்டம் விட்டு கண்டம் போய்டுது. இந்தியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா ன்னு தாவி குதிச்சுகிட்டே போறார். நான் லீனியர் என்பதற்காக இப்படியா? படிச்சு முடிக்கும் போது வெறைச்சு செத்துட்டேன்.

என் சின்ன வயசில் ஒரு பையன் சரோஜாதேவி புக் கட்டு கட்டா பையில வச்சு ஸ்கூலுக்கு கொண்டுவருவான். அது மாதிரி இவரு அடிக்கடி கட்டு கட்டா புத்தகம் ரிலீஸ் செய்வார். இவர் புக்கை கூட சரோஜா தேவி புக் மாதிரி, பாட புத்தகத்தில் மறைச்சோ, இல்லை பாத் ரூமில் உட்கார்ந்து தான் படிக்க முடியும்.

அந்த ஜீரோ டிகிரி புக்கை கூட நான் வீட்டிற்க்கு எடுத்துட்டு போக முடியலை. நண்பர்களும் சும்மா கொடுத்தா கூட வாங்க மாட்டேன்ன்னு சொல்லிட்டாங்க. அப்புறம் எடைக்கு போட்டுட்டேன்.


இந்த சர்ச்சை பற்றி இரு விதமான கருத்துக்கள் உலாவுகின்றன.
  1. சாரு திட்டமிட்டு ஒரு சின்ன பொண்ணை ஏமாற்ற முயற்சி உள்ளார்.
  2. ஒரு பெண்ணை வைத்து சாருவுக்கு எதிராக திட்டமிட்டு பின்னிய ஜடை. மன்னிக்கவும், சதி.
மொத்தத்தில் இது திட்டமிட்ட சதி என்பது தெள்ளத் தெளிவாகிறது.

முகத்தில் ஆரம்பித்து கடைசி வரை சாருவின் வர்ணிப்பை பயணம் செய்ய விட்டிருக்கிறது அந்த அப்பாவி பெண். கடைசி வரைக்கும் சாரு திருந்துவரா? திருந்துவாரான்னு? அந்த பெண் வெயிட் பண்ணி பார்த்திருக்கு. ஆனா பாவி பய திருந்தவே இல்லை. இந்த புள்ள என்ன பண்ணும்? அப்புறம் தமிழச்சி அக்காகிட்டே தான் நியாயம் கேட்டு போயிருக்கு. வினவு அண்ணாவும் கூடுதல் சப்போர்ட் கொடுக்க, நீதி நிலை நாட்டப் பட்டுள்ளது.

புதுசா கல்யாணம் ஆனா பொண்ணு, புகுந்த வீட்டில் போய் பீரோவின் கொத்து சாவி வாங்கி இடுப்புல மாட்டிக் கொள்கிற மாதிரி, இந்த பொண்ணு கொஞ்ச நாள் பேச ஆரம்பித்தவுடனே, அவரது பேஸ்புக் வால்(Wall) இன் சாவி(பாஸ்வோர்ட்) வாங்கி  பூட்டி வச்சிடுச்சு.  சாரு கண்ட மாதிரி பேசறது எல்லாம் பிரச்சினை இல்லையாம் ஆனால் கண்டவர்கள் வந்து சாருவின் பேஸ்புக் வாலில் எழுதுகூடாதாம். என்ன ஒரு பிரெண்ட்ஷிப்! ஆஹா! பிசிராந்தையாரும் கோப்பெருஞ்சோழனும் தோற்று விட்டார்கள்.

நாமெல்லாம் சாட் பண்ண, யூசர் ஐடி தான் கொடுப்போம். ஆனால் இவர் பாஸ்வோர்டையே  கொடுக்கும் அப்பாவி.


எனக்கு தமிழச்சின்னு ஒரு புரட்சி எழுத்தாளர் இருக்கிறாங்கன்னு எப்படி தெரியாம போச்சு? இதோ தெரிஞ்சிடுல்ல. சாருவின் நாமம் வாழ்க.


தமிழச்சியின் வாழ்க்கை வரலாறு புத்தகம் ஏதாவது இருந்தால் கொடுங்கள். படிச்சு அவர்களை பற்றி தெரிஞ்சுக்கோனும்.

செந்தமிழ் நாட்டு தமிழச்சியின் வலை தளத்தில் சாருவைப் பற்றிய அந்த இடுகையை படித்தேன். ஆரம்பத்தில் அந்த பெண் எவ்வளவு அப்பாவி என்று விவரித்த போதே எனக்கு அழுகை வந்து விட்டது. சன் டிவி சீரியலைப் பார்த்து அழுகாத என் பொண்டாட்டியும் தேம்பி தேம்பி அழுதாள். அதில் கிட்டதட்ட அந்த பெண் டிரஸ் போடுவதற்கு கூட பெற்றோரிடம் அனுமதி வாங்கித் தான் போடும் என்ற அளவுக்கு சொல்லப்பட்டிருந்தது. முதல் பாரா மட்டுமே போதும் அந்த பெண் எவ்வளவு அப்பாவி என்று நம்ப. ஆனால் சாருவின் காம வெறியைப் பற்றி புரிய வைக்க எத்தனை பாரா (பா.ராகவன் இல்லை) எழுதினாலும் பத்தாது.

சாரு ஒருமுறை தான் ஒரு ஆண் விபச்சாரியாய் இருந்தேன் என்று குறிப்பிட்டு இருக்கிறான்(ர்). ஆனாலும் அவர் நல்லவர், பெண்கள் விசயத்தில் தப்பு பண்ண மாட்டார் என்று நம்பியே பேசியிருக்கிறாள் அந்த பெண். விதி ஏமாற்றியது.

வெளிநாடுகளில், செக்ஸ் சாட், போன் செக்ஸ் என்பது பிரபலம். இந்தியாவிலும் கூடிய சீக்கிரம் பிரபலம் ஆகி விடும். ஆனால் இந்த ஆளுக்கு செக்ஸ் சாட் பண்ணவே தெரியல. சிறு பிள்ளைதனமாய் மனப்பாடம் செய்து பேசுவது போல் உள்ளது. முதல்ல ஒரு பொண்ணோட சம்மதம் கொஞ்சமாவது இருந்தாதான், சாட்டிங்கை தொடரவே செய்யணும். இந்த ஆள் வடிவேலு மாதிரி "நானும் ரவுடி, நானும் ரவுடி" என்று சொல்வதை நம்ப முடியவில்லை. "நானும் ஜெயிலுக்கு போறேன்" என்பதை வேண்டுமானாலும் நம்பலாம். அது நடக்க கூடியது.

கனிமொழி பற்றி வேறு உளறி வைத்திருக்கிறார். தமிழ் சினிமா வில்லன் போல "இரு வெளியில வந்து உனக்கு வைக்கிறேன் ஆப்பு" என்று கனிமொழி நினைக்கலாம். பெயில்ல விடாததுக்கே குண்டு வைக்கறாங்களாம். சாருவுக்கும் வைக்கலாம். எங்கேன்னு தான் தெரியல.

சாருவின் தொண்டர் ஆழ்வார்கள் எல்லாம் இன்னும் ஏன் மௌனப் புரட்சி செய்கிறார்கள்?. பேஸ்புக்கில் "சாருவின் வாசகர் வட்டம்" ஒன்று இருக்காமே!. அதில் ஒன்றியச் செயலாளர் யார்? என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள்?

இந்த இடத்தில் நம்ம நித்யானந்தா ஒரு டயலாக் சொன்னால் சுப்பரா இருக்கும்.

"வாழ்க்கை ஒரு வட்டம்டா. இதுல தோக்குறவன் ஜெயிப்பான். ஜெயிக்கிறவன் தோப்பான்."

ரஞ்சிதாவும் இப்போது குத்தாட்டம் போட்டு கொண்டிருக்கலாம்.

தமிழச்சியின் பேஸ்புக் புரபைலில் சாருவைப் பற்றி உள்ள போட்டோகளைப் பார்த்தால் தெரியும் இப்பெண்ணின் புரட்சி. பயங்கரமாய் சாருவைப் பற்றியும், அவரது அடிப் பொடிகள் பற்றியும் விலாசியிருப்பார். இரண்டு இன்ச் "***" உள்ளவர்கள் என்றெல்லாம் கலாய்த்திருப்பார். அதுவும் சாருவை இன்னொருவரோடு சேர்த்து gay கபுள்ஸ் போல சித்தரித்திருப்பார். ஆடிப் போய்விட்டேன். இப்படி செய்ய ஒரு ஆணுக்கே துணிச்சல் வராது. ஒரு ஆண் மட்டும் தான் அசிங்கமாய் பேச முடியுமா என்ன? இவர் நிச்சயம் பெரியார் கண்ட புதுமைப் பெண். பெண் சமுகத்தின் மறுமலர்ச்சி இவர் கையிலே உள்ளது. கையை விரித்து காட்ட சொல்லுங்கள், நன்கு புலப்படும். நான் இவரைப் பற்றி தவறாய் சொல்லவில்லை.

இது போல செய்வது தான்
ஆணாதிக்கம் வீழ்ந்து,
பெண் சுதந்திரத்திற்கு
வழிவகுக்கும்.
பெருக்கும்.
கூட்டும்.

No comments:

Post a Comment