Sunday, April 3, 2011

பன்றிகளின் ஆரவாரம்




நான் இந்தியா சுதந்திரம் அடைந்த போது பிறந்திருக்கவில்லை எனினும் சுதந்திரம் அடைந்த போது மக்கள் எவ்வளவு ஆரவாரத்தோடு கொண்டாடி இருப்பார்கள் என்று நேற்று தான் கண்டேன். இந்தியா உலககோப்பையை வென்று விட்டார்களாம். இது மிகப்பெரிய சாதனையாம். தொடர்ந்து மூன்று உலககோப்பையை வென்றவர்கள் எல்லாம் ஆர்ப்பரிக்காமல் கொண்டாடும் போது, இருபது ஆண்டுகளுக்கு பிறகு மொன்னையான ஒரு வெற்றியை பெற்றுவிட்டு கூக்குரல் இடுகின்றனர். வெற்றியை பெற்ற அடுத்த கணம், ஒவ்வொரு பன்றிகளும் ஒன்றையொன்று தழுவிக்கொண்டு பரவச நிலையை அடைந்து விட்டது. பார்க்க இந்த நாட்டில் ஏன்டா பொறந்தோம் என்ற வெறுப்பின் உச்சிக்கே சென்று விட்டேன். இது பன்றிகளின் தேசம். பன்றிகள் தான் கூட்டம் கூட்டமாய் உறுமி கொண்டே சாக்கடைக்குள் ஜல்சா பண்ணும். இன்னும் கொஞ்ச நாளில் இந்த பன்றி கூட்டங்கள் இன்னும் ஒரு சாதனையை செய்ய போகிறது. சீனாவை பின்னுக்கு தள்ளி அந்த வெற்றியை பெறப் போகிறது. அவ்வப்போது பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகள் இந்த பன்றி கூட்டங்களை கொன்று போட்டாலும், தான் சாகிற வரை மற்ற பன்றிகளுக்கு கவலை இல்லை. அந்த பன்றி கூட்டத்தில் நானும் ஒரு பன்றி தான். இந்த பன்றிகளை மேய்ப்பவன் மிகுந்த சந்தோசமாக பன்றிகளை கூறு போட்டு விற்று சம்பாதிக்கிறான். இந்த பன்றிகளுக்கு அதை உணர்ந்து கொள்ளவும் அறிவில்லை.

கிலானியையும், ராஜ பக்க்ஷே வையும் கூப்பிட்டு மூக்குடைத்து அனுப்பி விட்டார்களாம். இது ஒரு ராஜ தந்திரமான தாக்குதல். இனிமேல் இவர்கள் இந்தியர்கள் மீதும் தமிழர்கள் மீதும் கை வைக்க ரொம்பவே அஞ்சுவார்கள். என்ன ஒரு மூளைடா உங்களுக்கு? 

இந்த மீடியாக்கள் இதற்கும் மேலே. நேற்றைய இரவிலிருந்தே இந்தியா வெற்றிபெற்ற செய்தியை இடை விடாமல் ஒளிபரப்பி காசு சம்பாதிக்கிறார்கள். இதற்கு நடுவில் ஒரு மிகப் பெரிய அரசியல்வாதியோ இல்லை இந்திய பிரதமரோ தீவிரவாதிகளால் கொல்ல பட்டிருந்தாலும் கூட அந்த செய்தி வருமா என்று தெரியாது. இந்த மீடியாக்கள் போய் ஒவ்வொரு மக்களிடம் கருத்து கேட்கிறார்கள். அதில் பேசும் ஒவ்வொருவரும் மைக்கை விழுங்கும் வெறியிலே பேசுகிறார்கள். நேற்று மட்டும் தமிழ் நாட்டில் தேர்தல் வைத்திருந்தால், எல்லோரும் வீட்டில் இருந்தே தேசபற்றை காண்பித்து இருப்பார்கள். கருணாநிதி நேர்மையாக கள்ள ஒட்டு பெறாமல் மீண்டும் ஒரு முறை வெற்றி பெற்று இருப்பார். நாமும் இலவசங்களில் புரண்டு விளையாடலாம்.

நான் எப்போது சாவேன்? என்னை எப்படி சாகடிப்பார்கள்?

வருத்தத்துடன்,
குட்டி பன்றிக்குட்டி.

No comments:

Post a Comment