தலைப்பை பார்த்து இது வினவு எழுதிய பதிவு என்று நினைத்து விடாதிர்கள்.
நாட்டில் ஊழலுக்கு எதிரான மக்களின் எழுச்சி மற்ற சேனல்களை விட "டைம்ஸ் நவ்"வில் அதிகம் காண முடிகிறது. Jj. தமிழ் சேனல்களில் பார்த்தால், அன்னா ஹசாரே இருக்கிறாரா? இல்லை உண்ணாவிரதம் இருந்து இறந்து விட்டாரா? என்ற சந்தேகம் வருகிறது.
அன்னா ஹசாரே என்ற தன்னலமற்ற மனிதர் நாட்டுக்காக போராடுகிறார். முடிந்தால் நீங்களும் சப்போர்ட் செய்யுங்கள். அதை விடுத்து
அவர் நல்லவரா? கெட்டவரா?
நடுத்தர வர்க்கத்தின் போராட்டம்.
போராடுபவர்களுக்கு ஜான் லோக்பாலை பற்றி முழுதாக தெரியுமா?
போராடுபவர்கள் எல்லோரும் ஊழல் செய்யாதவர்களா? கொடுக்காதவர்களா?
இந்த போராட்டத்தால் ஊழல் ஒழிந்து விடுமா?
அவர் நல்லவரா? கெட்டவரா?
நாட்டில் ஊழலுக்கு எதிரான மக்களின் எழுச்சி மற்ற சேனல்களை விட "டைம்ஸ் நவ்"வில் அதிகம் காண முடிகிறது. Jj. தமிழ் சேனல்களில் பார்த்தால், அன்னா ஹசாரே இருக்கிறாரா? இல்லை உண்ணாவிரதம் இருந்து இறந்து விட்டாரா? என்ற சந்தேகம் வருகிறது.
அன்னா ஹசாரே என்ற தன்னலமற்ற மனிதர் நாட்டுக்காக போராடுகிறார். முடிந்தால் நீங்களும் சப்போர்ட் செய்யுங்கள். அதை விடுத்து
அவர் நல்லவரா? கெட்டவரா?
நடுத்தர வர்க்கத்தின் போராட்டம்.
போராடுபவர்களுக்கு ஜான் லோக்பாலை பற்றி முழுதாக தெரியுமா?
போராடுபவர்கள் எல்லோரும் ஊழல் செய்யாதவர்களா? கொடுக்காதவர்களா?
இந்த போராட்டத்தால் ஊழல் ஒழிந்து விடுமா?
போராடுபவர்களின் பின்புறம் கருப்பா சிவப்பா?
என்றெல்லாம் வயிறு எரிந்து "வினவு(வி)" கொண்டிருக்காமல், மூன்று வேளையும் வயிறு நிரம்ப நன்றாக சாப்பிட்டு உறங்கலாம்.
அவர் நல்லவரா? கெட்டவரா?
உன்னால் முடிந்தால் போராடு. இல்லையென்றால் பொத்திகிட்டு போ.
அன்னா தன் சொந்த கிராமத்தில் கட்ட பஞ்சாயத்து செய்தார். சாதியை வைத்து மக்கள் அங்கு நடத்தப் படுகின்றனர் என்றெல்லாம் குற்றம் கூறுகின்றனர்.
கட்டப் பஞ்சாயத்து செய்து வாழும் மன நிலையில் உள்ள ஒருவனால், உண்ணாமல் போராடி மற்றவர்களுக்காக உயிர் விட மனம் வருமா? கொஞ்சமாவது சிந்திக்க வேண்டாமா?
காங்கிரஸ் அவிழ்த்து விடும் இதை நம்புகிறவர்கள், இதை ஏன் வெளிநாட்டு சதி என்று அவர்கள் சொல்வதை நம்பக் கூடாது? அறிவு கெட்ட ஜென்மங்களே!
நடுத்தர வர்க்கத்தின் போராட்டமா?
இருந்து விட்டு போகட்டுமே! அவர்கள் என்ன அரசியல் வாதிகளைப் போல கீழ் தரமானவர்களா? ஏழைகள், விளிம்பு நிலை மனிதர்கள் அவர்களுக்கு போராட நேரம் இல்லை. அவர்களுக்கு உள்ள பிரச்சினைகளுக்கு அவர்கள் தான் போராட வேண்டும்.
தன் குண்டியை தான் தான் கழுவ வேண்டும். (சீய்! வினவு, சாரு போல நானும் பேசுகிறேனே!)
போராடுபவர்களின் பின்புறம் கருப்பா சிவப்பா? என்று பார்க்காதிர்கள்.
இது முழுக்க முழுக்க நடுத்தர மக்களின் பிரச்சினை என்று வைத்துக் கொண்டாலும், அதற்கு நடுத்தர மக்களே ஆதரவு தர மாட்டேன் என்கிறார்கள்.
Our population is our disadvantage and advantage. கூட்டத்தை பார்த்து தான் அரசியல் வாதிகள் பயப்படுவார்கள். அனைத்து நடுத்தர மக்களும் போராடினால் அரசியல் வாதிகள் தாங்க மாட்டார்கள்.
அதிலும் சில அறிவாளிகள் அன்னாவை கசாபை விட பயங்கரவாதி என்று பதிவெழுதி பிரபலம் அடைய நினைகிறார்கள். அருந்ததி ராயை போல நீங்கள் பிரபலம் அடைய நினைத்தால், கீழ் உள்ளவர்களை பயன்படுத்தி கொள்ளலாம்.
விஜய்
அஜித்
கருணாநிதி
ஜெயலலிதா
ராமதாஸ்
பார்ப்பனியர்கள்
பெண்ணியவாதிகள்
மன்மோகன் சிங் & சோனியா காந்தி
இன்னும் பலர்.
போராடுபவர்களுக்கு ஜான் லோக்பாலை பற்றி முழுதாக தெரியுமா?
போராடும் எல்லோருக்கும் தெரியா விட்டால் தான் என்ன? இது ஊழலுக்கு எதிரான போராட்டம். அதுதான் மூல காரணம். ஜனநாயகம் பாதிக்க படும் என்று அஞ்சுபவர்களுக்கு, இது வரை உள்ள ஜனநாயகம் மிகவும் அருமையாய் இருக்கிறதா? ஊழல்வாதிகள் எளிதில் தப்பிக்க உதவும் ஜனநாயகம் எதற்கு?
NGO க்களை ஏன் சேர்க்க வில்லை?. முதலில் ஜன்லோக்பல் கொண்டு வருவோம். அப்புறம் NGO மற்றும் ஆடு, மாடு, பன்னி என்ன வேண்டுமோ அனைத்தையும் சேர்க்கலாமே!
போராடுபவர்கள் எல்லோரும் ஊழல் செய்யாதவர்களா? கொடுக்காதவர்களா?
இருக்கலாம். கடுமையான சட்டங்கள் இல்லாதவரை நாம் எல்லோரும் ஊழல் செய்வோம். கொடுப்போம். சட்டங்கள் மட்டுமே நம்மை கட்டு படுத்த முடியும். நம் மனசாட்சி அல்ல. ஏனென்றால் நாம் எல்லோரும் மனிதர்களே!
ஒருவேளை ஜன்லோக்பல் அமல் படுத்தப் பட்டால் நீங்கள் என் மீதோ ஊழல் செய்கிறவர்கள் மீதோ புகார் கொடுத்து தண்டியுங்களேன். வெள்ளை காரனுக்கு காந்திதான் பிரச்சினையே தவிர, கூட சேர்ந்து போராடியவர்களின் பின்புறம் பிரச்சினை இல்லை.
போராடுபவர்கள் அனைவரும் நல்லவர்களாக இருக்க வேண்டியதில்லை. சில பேர் ஜாலிக்காக வரலாம். சிலபேர் கேமராவில் பேசுவதற்காக வரலாம். போராட்டம் தான் முக்கியம். அதற்காக சிதம்பரமும், சோனியாவும் போராடினால் சரி என்று சொல்லவில்லை.
இந்த போராட்டத்தால் ஊழல் ஒழிந்து விடுமா?
நம்பிக்கை தான் வாழ்க்கை. உங்களுக்கு நம்பிக்கையில் நம்பிக்கை இருந்தால் இந்த மாதிரி கேள்விகள் தேவை இல்லை.